தமிழகத்தில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி - Seithipunal
Seithipunal


சென்னை தமிழக சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,"தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக வானதி தெரிவித்திருக்கிறார். எப்படி? எங்கு இருக்கிறது? என தெரிவிக்க வேண்டும்.பொத்தாம் பொதுவாக பேசினால் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

அப்போது பேசிய சபாநாயர் அப்பாவு, இந்தியாவில் மத பயங்கரவாதம் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என வானதிக்கே தெரியும். பிரதமர் கூட சென்று பார்க்கவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது.கோவையில் கோவில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காஷ்மீர் மாதிரி இங்கே நடக்கக்கூடாது என வானதி பேசியுள்ளார், அப்படி தமிழகத்தில் நிச்சயமாக நடைபெறாது.

காஷ்மீர் விவகாரம் தெரிந்தவுடன் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும் உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தேன்.காஷ்மீர் பிரச்சனையில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

வானதி சீனிவாசன் பா.ஜ.க. தலைமையிடம் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

தமிழகத்திற்கான நிதியை பா.ஜ.க.விடம் இருந்து பெற்று தர தயவு செய்து தமிழக பா.ஜ.க.வினர் குரல் கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது சர்ச்சையாக இரு கட்சிகளிடமும் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Communalism cannot enter Tamil Nadu CM MK Stalin assures


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->