திமுக எம்எல்ஏவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை நிறுத்திவைப்பு - உச்சநீதிமன்றம் அதிரடி!
Supreme Court order DMK MLA Case
மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் பெற்றதாகக் கூறப்பட்ட வழக்கில் குற்றவாளியாக எழும்பூர் நீதிமன்றம் அறிவித்தது.
மேலும், அவருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டினை பரிசீலித்த உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது, இதனால் அவரது சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
மேலும், ரம்ஜான் நோன்பு காலம் என்பதால், தண்டனை அமலாகும் காலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதன் அடிப்படையில், நீதிபதி ஜவாஹிருல்லாவின் சிறைத் தண்டனையை ஒரு மாதத்துக்கு தள்ளி வைத்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம், ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்கவும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Supreme Court order DMK MLA Case