"அதை எடுத்துக் கொண்டு பாத்ரூம் ஓடி விடுவேன்"... பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி பேட்டி.! - Seithipunal
Seithipunal


இன்று உலக சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா. 2000 ஆண்டில் மிஸ் வேர்ல்ட் பட்டம்  வென்ற இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஷாருக்கான் சல்மான்கான், ஷாஹித் கபூர், ஹிர்திக் ரோஷன், அக்ஷய் குமார் என பாலிவுட்டின் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து  இந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.

குவாண்டிகோ என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் பட வாய்ப்புகள் வரவே அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். பாப் இசை பாடகர் ஆன நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது நடிப்பில் தற்போது சிட்டாடல் என்ற இணையதளத் தொடர் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக வெளியான பேட்டி ஒன்றில் தனது ஆரம்ப கால அமெரிக்க அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் இவர். அந்தக் காலகட்டத்தில் மிகவும் அதிகமான பய உணர்வை இவருக்கு இருந்ததாக தெரிவித்திருக்கிறார். உணவை வாங்கிவிட்டு பாத்ரூமுக்குள் சென்று சாப்பிட்டதாக கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. தனக்கு ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட பயத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி பள்ளியில் இருப்பவர்களுடன் சகஜமாக பழகி நட்பானதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டேட்டிங் மற்றும் நைட் கிளப் பார்ட்டிகளுக்கு செல்ல தன் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை தனது நண்பர்களுக்கு புரிய வைத்ததாகவும் கூறி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I will take it and run to the bathroom Priyanka Chopra shock interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->