அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள்! நடிகர் விஷால் ஆவேசம்! - Seithipunal
Seithipunal


”சினிமாவில் வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை சில கம்பனிகள் தவறாக பயன்படுத்திக்கொண்டு தப்பித்துவிடுகின்றனர். அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால்  யாராக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இன்று நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் விஷால் கூறியது: பெண்கள் 80 சதவீத பேர் நடிக்க வாய்ப்புத்தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத்தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி நன்றாக ஆராய்ந்து செல்ல வேண்டும்.

பெண்கள் என்றும் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை ஆகும்.

பெண்களை தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பை கழட்டி அடியுங்கள். தன்னை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்கூடாது. 

கேமராவை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை சில உப்புமா கம்பெனிகள்  போட்டோஷூட் எடுத்து, தவறாக பயன்படுத்திவிட்டு தப்பித்து விடுகின்றனர். இது தமிழ் சினிமாவிலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you say adjustment, hit it with a sandal! Actor Vishal is obsessed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->