உலகளவில் வசூல் வேட்டையில் ரூ. 50 கோடியை கடந்த தங்கலான்! - Seithipunal
Seithipunal


இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்த தங்கலான் திரைப்படம், சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியானது.

மேலும், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில்,  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்கச் சுரங்கத்தில்  மக்கள் சந்தித்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகளவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், தங்கலான் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 26.44 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் உலகம் முழுவதும் 53 கோடியே 64 லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தங்கலான் படத்தின் சர்வதேச வசூல் தொடர்பாக படக்குழு சார்பில் விசேஷ போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In the global collection hunt Rs Thangalon crossed 50 crores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->