''இந்தியன் 2 '' மாபெரும் இசை வெளியீட்டு விழா! வைரலாகும் போஸ்டர்.!
Indian 2 Grand Music Release
சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் தற்போது ''இந்தியன் 2'' என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் இரண்டு பாடல் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி வருகின்ற ஜூன் 1ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணி அளவில் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இசை வெளியீட்டு விழாவிற்கு மாபெரும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian 2 Grand Music Release