பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பழம் பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டர் மூலம் உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

லதா மங்கேஷ்கர், கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intensive treatment for Lata Mangeshkar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->