மீனாவை அந்த கோலத்தில் பார்த்து.. ரஜினி கூறிய வார்த்தை.. கோபித்துகொண்ட சம்பவம்.! - Seithipunal
Seithipunal


90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் ரசிகர்களால் கண்ணழகி என அன்புடன் அழைக்கப்பட்டவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், பிரபு என அந்த காலகட்டங்களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த அனைவருடனும் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வலம் வரும் மீனாவின் கலை சேவையை பாராட்டி மீனா 40 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு தேவா, ராஜ்கிரன், சரத்குமார் மற்றும் போனி கபூர் உள்ளிட்ட  திரையுலகின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகை மீனாவுடன் ஆன தனது  திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் . அப்போது மீனாவை முதன் முதலில்  எங்கேயோ கேட்ட குரல்   படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது சப்பியாக  பப்லியாக அழகாக இருந்தார் என  வர்ணித்த ரஜினிகாந்த் அன்புள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பிலும்  அதேபோன்று அழகாக இருந்ததாக கூறினார் .

எஜமான் படத்தின்  கதை விவாதம் ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்தபோது   டைரக்டரும் தயாரிப்பாளரும் மீனா வைத்தார் அந்த படத்தில் கதாநாயகியாக போட வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நான் மறுப்பு தெரிவித்தேன். அப்போது தெலுங்கு படத்தில் மீனா நடித்த இரண்டு பாடல்களை எனக்கு போட்டு காட்டினார்கள் அதைப் பார்த்துவிட்டு நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் வீரா மற்றும் முத்து ஆகிய திரைப்படங்களிலும் மீனாவுடன் நடித்தது ஒரு அருமையான அனுபவம் என கூறிய சூப்பர் ஸ்டார்  படையப்பா படத்தில்  நீலாம்பரி வேடத்தில் அவரை நடிக்க வைக்கவில்லை என்பதற்காக  தன்னிடம் மீனா கோபப்பட்டதாக கலாய்த்து உள்ளார் . தனக்கு பிடித்த இரண்டு  நடிகைகள் மீனா மற்றும் ஸ்ரீதேவி தான் என  தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Interesting information shared by superstar on seeing Meena


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->