மணிவண்ணனின் தாடிக்கு பின் இப்படி ஒரு ரகசியமா.?! பலரும் அறிந்திராத தகவலா இருக்கே.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் பல்வேறு  பரிணாமங்களை  கொண்டிருந்தவர் மணிவண்ணன். இவர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்து வெற்றி பெற்ற 16 வயதினிலே திரைப்படம் கூட மணிவண்ணனின் கதை தான். பாரதிராஜா இயக்கிய நூல்கள் திரைப்படத்திற்கும் வசனங்கள் எழுதி இருக்கிறார் மணிவண்ணன். இயக்குனராக  நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, 24 மணி நேரம், அமைதிப்படை ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவை அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி படங்களாகும்.

இறுதியாக மணிவண்ணன் சத்யராஜை வைத்து நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அதன் பிறகு உடல்நல குறைவு காரணமாக 2013 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருக்கு திருமணமாகி ரகுவரன் என்ற மகனும்  ஜோதி என்ற மகளும் உள்ளனர். மணிவண்ணன் அவர்களின் திருமணம் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மணிவண்ணன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது பாரதிராஜாவிற்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் அவர்களது பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடி வந்துள்ளனர். அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் பாரதிராஜாவிடம் மணிவண்ணன் தான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். அப்போது பாரதிராஜா எதுவும் கூறவில்லை ஆனால் ஒரு வருடம் கழித்து அந்தப் பெண் வீட்டில் பேசி மணிவண்ணனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பல வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

intereting incident about manivannan wedding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->