விஜய்க்கு போட்டியாக களம் இறங்குகிறாரா இயக்குனர் அட்லி.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர்  தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

எந்த மேடை ஏறினாலும் தளபதி விஜயை தனது அண்ணன் என்றும் என் தளபதி என்றும் உரிமையுடன் கூறி வருவார் அட்லி. அந்த அளவுக்கு விஜயுடன் நெருக்கமான ஒரு பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் அவரது இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ஜவான் திரைப்படம்  வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அட்லியும் தனது ஜவான் திரைப்படத்தை அக்டோபர் மாதத்தில் தனது அண்ணன் விஜய் படத்திற்கு எதிராக களம் இறக்கப் போகிறாரா? என  தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்ணா அண்ணா என்று சொல்லிவிட்டு அண்ணனுடனே மோதல துணிந்து விட்டாரா? அட்லி என  இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is atlee getting ready to clash with thalapathy viay leo


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->