சமந்தா செய்த இந்த செயல் தான் விவாகரத்துக்கு காரணமா.?வெளியான காரணத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என இந்திய சினிமாவின் பல்வேறு திரைப்படங்களில்  நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியிருப்பவர். சமீபத்தில் மயோசைட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அதிலிருந்து மீண்டு வந்து யசோதா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது . தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

ஃபேமிலி மேன், ஃபார்சி போன்ற  வெற்றிகரமான இணையதள தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டி கே வின் சிட்டாடல் என்ற இணையதள தொடரில் தற்போது நடித்து வருகிறார். இவருக்கும் தெலுங்கு சினிமாவின்  மெகா ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது திருமண பந்தம் கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இவர்களது திருமணம் தொடர்பாக  பல்வேறு விதமான வதந்திகளும், கருத்துக்களும், சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில் பிரபல திரைவிமர்சகரும் சென்சார், நிபுணருமான உமர் சந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பான ஒரு ட்விட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இது சினிமா உலகில் ஷாக்கிங்கை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பதிவை அவர் சமந்தா கூறுவது போலவே பதிவு செய்து இருக்கிறார். அதில் "நாக சைதன்யா மோசமான கணவர், அவர் என்னை உடலளவிலும் மனதளவிலும் மிகவும் காயப்படுத்தி விட்டார். நான் கர்ப்பமாக இருந்தேன் ஆனால் கருக்கலைப்பு செய்து விட்டேன். கடவுளுக்கே நன்றி நான் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன்." என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is this a reason why samatha divorce from naga chaitanya shocking revealation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->