இது பேருதான் கொட்டுக்காளியா?.... அர்த்தத்தை பகிர்ந்த படக்குழு!
Is this the name of Kotukkali The film crew shared the meaning
நடிகர் சிவகார்த்திகேயன் பல திரைப்படங்களை தனது எஸ்கே புரோடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். அதன்படி சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்த படமானது ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடம் பாராட்டுகளை பெற்றது.
இதற்கிடையே, இந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் படத்தின் கதை குறித்து பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், 'கொட்டுக்காளி' என்பது தென் தமிழகத்தில் அதிகமாக புலக்கத்தில் உள்ள ஒரு சாதாரண வார்த்தை தான்.
இதற்கு அர்த்தம் 'ஒரு பெண் தனக்கு விருப்பமானதை செய்யும்போதும், அது ஊராருக்கு தவறாக தெரிந்தால் அந்த பெண்ணை அவர்கள் கொட்டுக்காளி என்று அழைப்பார்கள்' என்று இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் கூறியுள்ளார். மேலும் நடிகர் சூரி, இப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் சவாலானது என்றும், நடிகை அன்னா பென் இப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் இப்படம் குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர்.
English Summary
Is this the name of Kotukkali The film crew shared the meaning