தாய் பிறந்த நாளில் தவிப்புடன் புகைப்படம் வெளியிட்ட ஜான்வி கபூர்.! ஆறுதல் கூறும் ரசிகர்கள்.!
Jaanvi kapoor Photos with sridevi Viral
ஸ்ரீ தேவி பிறந்த நாளில் ஜான்வி கபூரின் வாழ்த்து பதிவு வைரலாகி வருகின்றது.
கடந்த 2018 பிப்ரவரி 24 ஆம் தேதி நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் அறை தொட்டியில் உயிரிழந்தார். அவரது மரணம் நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 13ஆம் தேதியான இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஸ்ரீதேவியின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு தாயுடன் இருந்த சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த பதிவில்," பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா. நான் ஒவ்வொரு நாளும் உன்னை மிஸ் பண்ணுகிறேன். உன்னை எப்போதும் நேசிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Jaanvi kapoor Photos with sridevi Viral