வன்மத்தை கக்கிய ஜெய்பீம் || சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது இன்னும் 5 நாளில் வழக்கு பதிய வேண்டும் - நீதிமன்றம்.!
jai bhim issue court order
ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் மீது வழக்குப்பதிய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருப்பதால் வழக்குபதிய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது, ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் புகார் அளித்து இருந்தார்.
அவரின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றியும் தொடர்ந்திருந்தார்.
இங்தக வழக்கை வைசரனை செய்த நீதிமன்றம், புகார் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
jai bhim issue court order