ஜெயிலர் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஷிவ ராஜ்குமார்! - Seithipunal
Seithipunal


நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் 'ஜெயிலர்'. இந்த படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இதில் விநாயகர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றங்களில் கனடா நடிகர் ஷிவ ராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோர் நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் 7000 திரையரங்குகளிலும் தமிழகத்தில் 1200 திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாகியது. உலக அளவில் ஒட்டுமொத்தமாக இந்த படம் ரூ. 95.78 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில் ரஜினிக்கு பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களின் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நடிகர் ஷிவ ராஜ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, ''ஜெய்லர் நன்றாக ஓடிக் கொண்டுள்ளது. ரசிகர்களுக்கு மிக்க நன்றி. எனக்கு வாய்ப்பளித்த நெல்சன் மற்றும் ரஜினி சாருக்கு மிக்க நன்றி. எப்போதும் என் நெஞ்சில் உங்களின் அன்பினை வைத்திருப்பேன்'' என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jailer success Shiva Raj Kumar thanked fans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->