"எங்க போனாலும் நீ தானம்மா." தாயின் பிரிவு.. ஏக்கத்தில் ஜான்வி கபூர் பதிவு.!
Janvi Kapoor about her mother sri devi
பிரபல தென்னிந்திய நடிகையாக இருந்த ஸ்ரீதேவி பல்வேறு மொழிகளில் நடித்து கலக்கியவர். இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்ற நிலையில், அவர்களில் ஒருவரான ஜான்வி கபூர் பிரபல நடிகையாக இருந்து வருகின்றார்.
இவர் மாடலாகவும், கதாநாயகியாகவும் தனது திறமையை நிரூபிக்க போராடி வருகின்றார். தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கி யோகி பாபு, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
லேடி சூப்பர் ஸ்டார் கதாபாத்திரமாச்சே? ஜான்வி கபூர் எப்படி நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் வேற லெவலில் நடித்து நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நிரூபித்து இருந்தார்.
இந்த நிலையில் தனது தாயின் நினைவாக ஒரு பதிவை வெளியிட்டுள்ள நடிகை ஜான்வி கபூர், " அனைத்து இடங்களிலும் நான் உங்களை எதிர்பார்க்கிறேன் அம்மா. என்னுடைய செயல்கள் அனைத்திலும் உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றேன். நான் எங்கு போனாலும் என்ன செய்தாலும் எந்த செயலிலும் தொடக்கமும் முடிவும் நீங்கள் தான்." இன்று தெரிவித்துள்ளார்.
English Summary
Janvi Kapoor about her mother sri devi