வெளியாகும் முன்னே வசூலில் சாதனை படைத்த அட்லியின் ஜவான் ! - Seithipunal
Seithipunal


ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இயக்குனர் அட்லி பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார் என நம்பகத்தன்மை வட்டாரங்கள் சொல்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஷாருக்கானின் மனைவி கவுரி கான் படத்தை தயாரித்து வெளியிடுகிறார். 

‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் போன்றவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்தவர். இவர் இயக்கும் இந்த படத்தில் தமிழ் திரைத்துறை பிரபலங்கள் நடிப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இளைய தளபதி விஜய் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawan Celebrates Collection Before Realesed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->