வரலாற்று சாதனை படைத்த ஜவான் ! ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா? - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லி இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடித்த உருவான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவர்களோடு யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக நேற்று வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர் மத்தியின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை இந்த படத்தின் இயக்குனர் அட்லி தனது சமூக வலைதள பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "கடவுள் மிகவும் அன்பானவர், அனைவருக்கும் நன்றி, உலகலாவிய அன்புக்கு நன்றி" என குறிப்பிட்டு ஜவான் திரைப்படம் முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawan has collected 129 crore 60 lakhs worldwide on 1st day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->