இரண்டே நாளில் இத்தனை கோடிகளா! வாரிக் குவிக்கும் ஜவான் திரைப்படம்! - Seithipunal
Seithipunal


இந்தி நடிகர் ஷாருக் கான் ஹீரோவாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்க பான் இந்தியா திரைப்படமாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர் மத்தியின் வரவேற்பை பெற்றுள்ளது

இந்த நிலையில் ஜவான் திரைப்படம் முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அந்த படத்தின் இயக்குனர் அட்லி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்திய திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனால் ஜவான் படத்தின் 2வது நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என சினிமா ரசிகர்கள் மத்தியிலும், தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதன் நிலையில் ஜவான் திரைப்படம் இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் ரூ. 240.47 கோடி கல்லா கட்டியுள்ளதாக திரைப்பட குழு அறிவித்துள்ளது. இன்றும் நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் ஜவான் படத்தின் வசூல் இன்னும் இரண்டே நாட்களில் 500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawan has collected Rs240 crore at the end of second day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->