ஜாவான் படத்திற்காக நீருக்கடியில் படப்பிடிப்பு நடத்திய அட்லீ.! வைரலாகும் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்னும் மூன்று வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தவர். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்தத் திரைப்படம் முதலில் ஜூன் மாதம் வெளியாகயிருந்தது. தற்போது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் கூட தன்னுடைய மிகச் சிறந்த இசை ஜவான் படத்தில் தான் இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தார்.

ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பை நகரங்களில்  பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீருக்கடியில் சில காட்சிகளை  இயக்குனர் அட்லீ படமாக்கியிருக்கிறார். அவற்றின் வீடியோ தற்போது ட்விட்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jawan movies shooting spot underwater shoot went viral in socal media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->