ஜிகர்தண்டா-2 டீசர் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி இதோ! - Seithipunal
Seithipunal


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மதுரையை மையமாக வைத்து உருவான படம் ஜிகிர்தண்டா. இந்த படத்தில் கதாநாயகனாக சித்தார்த், கதாநாயகியாக லட்சுமி மேனன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தனர். பாபி சிம்ஹா இந்த படத்திற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாதத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகும் எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது

அதன்படி ஜிகிர்தண்டா-2 படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 12:12 மணிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான போஸ்டரையும் அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jigirthanda 2 teaser will be released on September11


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->