புதிய சாதனை படைக்கப் போகும் கல்கி 2898 AD திரைப்படம்..! 8 நாட்களில் எவ்வளவு வசூல் என்று தெரியுமா?! - Seithipunal
Seithipunal



'கல்கி 2898 AD' திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் எத்தனை கோடி என்ற விவரம் வெளியாகி உள்ளது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தின் 8 நாட்கள் வசூல் நிலவரத்தை திரைப்பட வணிகவியலாளர் ரமேஷ் பாலா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த 'கல்கி 2898 AD' திரைப்படத்தில், பாகுபலி மற்றும் சலார் வெற்றிப் படங்களின் நாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். 

பான் இந்தியா படமாக மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் கடந்த ஜூன் 27ம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படம் உலக அளவில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. 

இப்படத்தின் முதல் நாள் வசூல் 191.5 கோடி, மற்றும் 4 நாட்களில் உலக அளவில் சுமார் 500 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தற்போது படம் வெளியாகி 8 நாட்களில் சுமார் 800 கோடி வசூலைக் கடந்து விட்டதாக திரைப்பட வணிகவியலாளர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். 

இதுவரை எந்த இந்திய திரைப்படமும் படைக்காத மாபெரும் புதிய சாதனையை இதன் மூலம் 'கல்கி 2898 AD' திரைப்படம் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalki 2898 AD Movie Box Office ollection in 8 Days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->