'எஞ்சி உள்ள நாட்கள் என் மக்களுக்காக' - கமல்ஹாசன் பதிவு!
Kamal Haasan Twitter
நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில், அவரை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய எதிர்கால வாழ்க்கை அரசியலை நோக்கி தொடரும் என்பதையும் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, ''ஒருவன் 64 ஆண்டுகள் வாழ்க என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான்.
அது என் உடலுக்கானதாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது, என்னை விட திறமையானவர்கள் பலருக்கு கிட்டா வரம். வாழ்த்திய அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணியுடன் நன்றி. இனி உள்ள நாட்கள் என் மக்களுக்காக'' என தெரிவித்துள்ளார்.
தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக, நடிகர் கமல்ஹாசன் 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதை அவர், முதல் படத்திலேயே பெற்றார்.
இந்த படம் வெளியாகி 63 வருடங்கள் முடிந்து 64ஆவது வருடம் தொடங்குகிறது. இந்திய திரை உலகில் கமலஹாசன் 64வது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.