ஒரே மாதத்தில் இரண்டு படம் - கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்.!
kamal movie release in june month
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு விக்ரம் படம் வெளியானது. அதன் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக அவரது நடிப்பில் எந்த படமும் வெளி வரவில்லை. இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் கமல்ஹாசன் நடித்த `இந்தியன் 2,' 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் இரண்டு படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல்பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக கமலின் தோற்றங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.
இதேபோல், `கல்கி 2898 ஏடி' படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஜூன் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த இரண்டு படங்கள் ஒரே மாதத்தில் திரைக்கு வருவது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. இதற்கிடையே கமல்ஹாசன் தற்போது 'தக்லைப்' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத் தக்கது.
English Summary
kamal movie release in june month