தளபதி - உலகநாயகன் மோதலுக்கு இதுதான் காரணமா.?! கூப்பிட்டுவச்சு அசிங்கபடுத்திய கமல்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகள் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய். உலக நாயகன் கமல்ஹாசன் மற்ற நடிகர்களுடன் காட்டும் நெருக்கங்களை இதுவரை தளபதி விஜய்யிடம் காட்டியதில்லை. தளபதி விஜயையும் அவரிடமிருந்து  விலகியிருக்கிறார். இருவரிடமும் ஏதோ மனக்கசப்பு  இருப்பதாகவே ரசிகர்களுக்கு தோன்றியது. தற்போது அதனைப் பற்றிய உண்மை வெளியாகி இருக்கிறது.

விஜயின் ஃபேவரிட் இயக்குனர்களில் ஒருவர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி   தளபதி விஜயுடன் தெறி படத்தில் இணைந்தார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் வெற்றி அடித்தது இந்த கூட்டணி.

ஒரு இயக்குனராக மட்டும் பார்க்காமல்  அட்லியுடன் மிகவும் நட்பு பாராட்டி வந்தார் தளபதி விஜய். இயக்குனர் அட்லியும் அவரை தனது அண்ணனாகவே  பார்த்தார். பொதுவாகவே திரைத்துறையில் அட்லியின் மீது சில விமர்சனங்கள் இருக்கின்றன. அட்லி பழைய திரைப்படங்களின் கதைகளை வைத்து தனது படங்களை இயக்குவதாக அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவரது முதல் படமான ராஜா ராணி திரைப்படமும் மௌன ராகம் படத்தின் கதை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் தளபதியின் மெர்சல் படத்தின் கதை அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டதாகவே விமர்சகர்களும் தெரிவித்து வந்தனர். அந்தப் படம் வெளியான புதிதில் அட்லியை தனது வீட்டிற்கு அழைத்த கமல் வீடு முழுவதும் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தின் போஸ்டர்களை வைத்திருந்தாராம். மெர்சல் படத்தின் கதையை காப்பி அடித்ததை மறைமுகமாக அட்லிக்கு உணர்த்தியிருக்கிறார் கமல். மேலும், கமல்ஹாசன் தனது இயக்குனருக்கு செய்த அவமானத்தை ஏற்றுக்கொள்ள முடியாத தளபதி விஜய் இன்று வரை அவரை விட்டு விலகியே இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamala insults Atlee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->