இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமலஹாசன் தந்த லைப் டைம் செட்டில்மெண்ட்.. குதூகலத்தில் லோகேஷ்.!!
kamalhaasan letter to logesh kanagaraj
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெகட்டிவ் விமர்சனங்களே, இல்லாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு தனது கைப்பட எழுதிய கடிதத்தை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில் அன்பு லோகேஷ், பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால் மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதையை பழையபடியே தொடரும்.
பொதுவெளியில் என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்யாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சனங்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர்கள் முன்னணி திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப் பட்டதை விட அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்.
யூடியூபை திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தைகளை எடுத்துக்கொள்ளலாம். இதையெல்லாம் தொடர் வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்து இருங்கள், பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான் கமல் ஹாசன் என தெரிவித்துள்ளார்.
English Summary
kamalhaasan letter to logesh kanagaraj