தமிழக முழுவதும் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு பறந்தஅதிரடி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.

அந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்களில், "கல்வி நிறுவனங்களில் சம்பந்தமில்லாத நபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது, அவர்களின் நடமாட்டம் குறித்த பதிவு அவசியம் பராமரிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டது. 

மேலும், கல்வி நிறுவனங்களில் பணி காரணமாக வரும் எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்ட அனைவரின் விவரங்கள் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் எந்தவித குளறுபடியும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவுறுத்தப்பட்டது.  

அதனுடன், "பயோமேட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனும் பரிந்துரைகளும் வழங்கப்பட்டன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anna University issue Higher Education TNgovt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->