சொத்துக்களை இழந்த பிரபல நடிகை.. எல்லாம் அந்தப் படத்திற்காக தான்.!
Kangana Ranawat sad about His Assets
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தவர்தான் நடிகை கங்கன ராணாவத். இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார்.
இவர் ஒரு பிரபல மாடலும் ஆவார். அடிக்கடி அரசியல் கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது கங்கணா ரெணாவத் வழக்கமாக செய்யும் ஒரு விஷயம் தான். இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகின்ற சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடித்து வருகின்றார்.
இவரது அரசியல் கருத்துக்களினால் அவருக்கு பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே அவர் சூட்டிங் போகும்போது கூட அவருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், எமர்ஜென்சி திரைப்படத்திற்காக தனது சொத்துக்களை அடகு வைத்திருப்பதாக நடிகை கங்கானா ரணாவத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில், "படத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இந்த படத்திற்காக என் சொத்துக்களையே அடமானம் வைத்திருக்கிறேன். டெங்குவால் எனது ரத்த அணுக்கள் குறைந்து விட்டன. இப்படிப்பட்ட நேரத்திலும் நான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தான் இருக்கிறேன்." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
English Summary
Kangana Ranawat sad about His Assets