கங்குவா படத்தின் ப்ரோமோ டீசர் - எப்போது வெளியாகும்?
kanguva movie promo teaser release today
கங்குவா படத்தின் ப்ரோமோ டீசர் - எப்போது வெளியாகும்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளர் என்று பல திறமைகளை கொண்ட இவர் நாளை (ஜூலை 23 ) தனது 48 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், பிரபல இயக்குனர் ’சிறுத்த’ சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா' படத்தின் புரோமோ கிளிம்ப்ஸ் ஒன்றை படக்குழு இன்று நள்ளிரவில் வெளியிடுகிறது.
இதற்கான அறிவிப்பை நடிகர் சூர்யாவின் புதிய போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டது. அதில், நடிகர் சூர்யா கையில் வாள் ஏந்தி பல தழும்புகளுடன் இருப்பது போல் உள்ளது. முப்பரிமாண வடிவில் சரித்திர கதையாக உருவாகி வரும் இந்தப் படம் பத்து மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகிறது.
இன்று நள்ளிரவில் வெளியாகும் இந்த புரோமோ டீசர் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இருக்கும் என்றும், அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தின் தோற்றத்திற்காக நடிகர் சூர்யா கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒப்பனை செய்துள்ளார். அதேபோல், இந்த ஒப்பனையை கலைப்பதற்கும் இரண்டு மணி நேரம் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
kanguva movie promo teaser release today