கங்குவா படம் எப்போது வெளியாகிறது? - மரண அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது .

இந்தப் படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியது. வெளியான சில மணி நேரத்திலேயே பலக் கோடி பார்வைகளை பெற்றது. இதில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே தயாரிப்பாளர் தனஞ்செயன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கங்குவா திரைப்படத்தை வரும் திபாவளிக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார். இந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் 3டி வேலைகள் முடிந்துவிடும். படத்தை 10 மொழிகளிலும் வெளியிடப்போகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanguva movie release date update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->