கங்குவா திரைப்படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி - தமிழக அரசு உத்தரவு! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் கங்குவா திரைப்படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்த அந்த உத்தரவில், "ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் 14.11.2024 அன்று வெளியாகும், "கங்குவா” என்ற தமிழ்த் திரைப்படத்தை 14மற்றும் 15 ஆகிய நாட்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை காலை 5 மணி முதல் இரவு 2.00 மணி வரை திரையிட, அனுமதி அளிக்கும்படி அரசைக் கோரியுள்ளனர்.

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையரங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் "கங்குவா” தமிழ்த்  14.11.2024 அன்று ஒரு நாள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சியினை காலை 9 மணி முதல் இரவு 2.00 மணி வரை (5 காட்சிகள் மட்டும்) திரையரங்குகளில் திரையிட ஆணையிடுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanguva Tamilnadu Special Show


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->