நேரடித் தமிழ் படத்தில் முதன் முறையாக 'ஹீரோவாக' களமிறங்கும் கன்னட சூப்பர் ஸ்டார் ..! - Seithipunal
Seithipunal



திரைப்பட நடிகராகவும், பின்னணிப் பாடகராகவும், தயாரிப்பாளாராகவும் இருப்பவர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர் ஸ்டாரான இவர், 1986ம் ஆண்டு "ஆனந்த்" என்ற கன்னடத் திரைப்படம் மூலம் திரைத் துறையில் அறிமுகமானார். தொடர்ந்து 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள சிவராஜ்குமார், மொழி கடந்து தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சிவராஜ்குமார் நடித்துள்ள பெரும்பாலான கன்னடப் படங்களுக்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "ஜெயிலர்" திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான "கேப்டன் மில்லர்" திரைப்படத்திலும் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் சிவராஜ்குமார் தமிழில் முதன் முறையாக கதாநாயகனாக களமிறங்கவுள்ளார். சத்திய ஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கும் "ஜாவா" திரைப்படத்தில் தான் சிவராஜ்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

ஈட்டி, ஐங்கரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு இந்த "ஜாவா" திரைப்படத்தை இயக்கவுள்ளார் இது இவரின் மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது என்றும், இது ஒரு ஆக்ஷன் எண்டெர்டெயினர் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் இந்த படத்தில் சிவராஜ்குமார் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kannada Super Star Debut in Direct Tamil Movie As Hero


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->