'பொண்ணே.. கிடைக்கல.. காதலை பாழாக்கிய அம்மா' வெறுத்துப்போன கார்த்தி.! - Seithipunal
Seithipunal


என் வாழ்வில் இந்த நபரால் தான் காதலிக்க வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டது என்று நடிகர் கார்த்தி தற்போது மனம் திறந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசிய பொழுது, " எனது அண்ணன் சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் எனது அம்மா, "நீயாவது நாங்கள் சொல்லும் பேச்சை கேட்டு திருமணம் செய்து கொள். நீயும் லவ்வு, கிவ்வு என்று ஏதாவது பண்ணி விடாதே. அவ்வளவுதான்." என்று எச்சரித்தார். 

இதனால் எனக்கு யாரையாவது பார்த்து கிரஷ் வந்தால்கூட அம்மாவிற்கு பயந்து காதலிக்காமல் இருந்து வந்தேன். ஆனால், எனக்கு திருமணத்திற்கு பெண் தேடிய பொழுது பெண்ணே கிடைக்கவில்லை. ஆறு வருடங்களாக பெண் தேடி தேடி ஓய்ந்து போன எனது அம்மா என்னிடம் வந்து 'யாரையாவது காதலிக்கிறாயா?' என்று கேட்டார். 

காதலிக்கவே கூடாது என்று என் வாழ்வில் சோதனையை ஏற்படுத்தி விட்டு இப்படி கேட்கிறாரே என்று எனக்கு வெறுப்பாக இருந்தது. 'அதெல்லாம் இல்லை. நீங்கள் தான் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.' என்று  கூறிவிட்டேன். பின் அவர்கள் பார்த்து வைத்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டேன்" என்று வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் கசிந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. 

இதுபோல பல 90கிட்ஸ் களின் வாழ்க்கையில் நடந்து இருக்கும். பள்ளி கல்லூரியில் படிக்கும் பொழுது காதலித்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டும் பெற்றோர், பெண் தேடி அலைந்துவிட்டு யாரையாவது காதலிக்கலாமில்ல? என்று வெறுப்பேற்றுவார்கள். 

இந்த வயதில் எப்படி காதலிக்க முடியும்? அப்படியே நாம் காதலிக்க ரெடியாக இருந்தாலும் கூட எந்த பெண் இந்த வயதில் காதலிக்க தயாராக இருக்கின்றார்? இதுபோல பலரது குமுறல்களை சமூக வலைதளங்களில் பெண் கிடைக்காத இளைஞர்கள் கூறுவதைக் காணமுடிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthi about His mother


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->