பருத்திவீரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது.. இந்த வாரிசு நடிகரா.? அநியாயமா மிஸ் பண்ணிட்டாரே.?!
karthi was not the first choice for lead role in paruthiveeran movie
தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் திரைப்படங்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயமாக இடம் பெறும் முதல் படம் பருத்திவீரன். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த படம். 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் பிரியாமணி நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தான் அறிமுகமான முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகராக உருவெடுத்தார் கார்த்தி. தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் வெற்றி நடை போட்டது இந்த திரைப்படம். வெளியாகி 16 ஆண்டுகள் ஆகியும் இந்தத் திரைப்படத்தின் மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு குறையவில்லை. தற்போது இந்த திரைப்படத்தினை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
அந்தத் தகவலின்படி அமீர் பருத்திவீரன் கதையை எழுதும் போது கதாநாயகனுக்கு முதல் தேர்வாக இருந்தவர் இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு தானாம். படப்பிடிப்பு நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர் சக்கரக்கட்டி என்ற படத்தில் ஒப்பந்தமாகி அந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் வேறு கதாநாயகனை தேர்வு செய்திருக்கிறார் அமீர்.
அதன்பிறகு தான் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையை அமீருக்கு வழங்கி இருக்கிறாராம். ஒருவேளை இதில் சாந்தனு நடித்திருந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும் என்பது மறுக்க உண்மை.
English Summary
karthi was not the first choice for lead role in paruthiveeran movie