கீர்த்தி சுரேஷின் 'ரகு தாத்தா' - வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' படத்தின் புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. 

நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ்க்கு மறைந்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. 

சமீபத்தில் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் 'ரகு தாத்தா' இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு 'ரகு தாத்தா' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keerthy Suresh Raghu thatha Photo Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->