'இந்த வார்த்தையை என் அருகில் இருப்பவர்கள் கூட சொல்ல மாட்டார்கள்' - விஜய் தேவரகொண்டா பேட்டி! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா நடித்துள்ள படம் 'குஷி'. மேலும் இந்த படத்தில் சச்சின் கெடகர், சரண்யா, முரளி சர்மா, லக்ஷ்மி, ரோகினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்த படத்தை ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். 

ஹைதராபாத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் தேவர்கொண்டா தெரிவித்திருப்பதாவது, ''இந்த படம் திருமணம் குறித்தும், குடும்ப அமைப்பு குறித்தும் சுவாரசியமாக இருக்கும். 

இந்த படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு பான் இந்தியா முறையில் வெற்றி பெற்ற படங்கள் ஆக்சன் படங்களாகத்தான் இருக்கிறது. 

ஆனால் இது காதல் படம் தானே என கேள்வி எழுப்பியதற்கு, காதல் என்பது அனைவரது மன உணர்வு தான். இந்த படமும் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். 

திருமணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த வார்த்தையை என் அருகில் இருப்பவர்கள் கூட சொல்ல மாட்டார்கள். அது குறித்து இப்போது உரையாடுகிறேன். என் நண்பர்கள் திருமணம் செய்து கொள்வதை கண்டு நான் மகிழ்கிறேன். 

என் வாழ்க்கையிலும் திருமணம் அமையும் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய அத்தியாயம் அதுதான். 

இதற்கு முன் நான் நடித்த 'லைக்கர்' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நான் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கின்றன. 

என்னுடைய படங்கள் சரியான முறையில் ஓடாத போது அது எனக்கு காயத்தை ஏற்படுத்தும். ஆனால் அது என் ஓட்டத்தையும் வேகத்தையும் தடுக்காது. 

ரஷ்மிகா சமந்தா ஆகியோர் குறித்து தெரிவிக்கையில், எந்த அழகான நடிகைகளுடனும் மகிழ்ச்சியாகவே நடிப்பேன். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. 

எனக்கு தமிழில் பல இயக்குனர்களை பிடிக்கும். இயக்குனர் வெற்றிமாறனின் ரசிகன் நான். பா. ரஞ்சித் படங்கள் மிகவும் பிடிக்கும்'' என விஜய் தேவர்கொண்டா தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kushi Vijay Devarakonda Interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->