விளையாட்டுல மதத்தை கலந்திருக்கிங்க... தெறிக்கவிடும் ரஜினியின் லால் சலாம் டீசர்! - Seithipunal
Seithipunal


இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'. 

உள்ளூரில் நடக்கும் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார். மேலும், இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், இன்று தீபாவளியை முன்னிட்டு லால் சலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை, ரஜினியின் "விளையாட்டுல மதத்தை கலந்திருக்கிங்க..." என்ற வசனத்துடன் கூடிய இந்த டீசர் எகிற வைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lal Salaam Aishwarya Rajinikanth Rajini 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->