லியோ படத்தின் ‘நா ரெடி' பாடலின் ப்ரோமோ வெளியீடு.. தெறிக்கும் விஜய் குரல்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் கௌதம் மேனன் ஆக்சன் கிங் அர்ஜுன் ஹாலிவுட் நடிகர் சஞ்சய் நடிகை பிரியா பவானி சங்கர் திரிஷா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட படிப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே நடிகர் விஜய்யின் பிறந்தநாளான வரும் ஜூன் 22 ஆம் தேதி அன்று லியோ படத்தில் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது 'நா ரெடி' எனத் தொடங்கும் முதல் பாடலின் ப்ரோமோவை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo movie 1St single promo release


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->