"நா ரெடி" பாடலுக்கு எழுந்த கடும் எதிர்ப்புக்கு பணிந்தது லியோ படக்குழு.!!
Leo team bowed to strong opposition to Na Ready song
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு "லியோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் "நா ரெடி" என தொடங்கும் லியோ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது.
விஜய் சிகரெட் பிடிப்பது போன்றும், நடன கலைஞர்கள் கையில் மது கோப்பைகளுடனும் இந்த பாடலில் இடம்பெற்று இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் பல சமூக ஆர்வலர்கள் விஜய்க்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க தொடங்கினர்.
இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் நடிகர் விஜய்க்கு எதிராக புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பாடல் இருப்பதால் லியோ படத்தின் நா ரெடி பாடலை தடை செய்ய வேண்டும்.
போதைப்பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் பாடல் இருப்பதாக அந்த புகாரில் குற்றம் காட்டியுள்ள அவர் நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
விஜய்க்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்த நிலையில் லியோ படத்தில் நா ரெடி பாடலில் எச்சரிக்கை வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்றவரும் காட்சிகளில் "புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்" என்ற வாசகத்தை படக்குழு சேர்த்துள்ளது.
English Summary
Leo team bowed to strong opposition to Na Ready song