திக் திக் நொடிகள்: லியோ டிரைலர் வெளியீட்டு நேரம்? வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். 

நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோக்களை பட குழு வெளியிட்டிருந்தது. 

வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக உள்ளதாகவும் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிப்பு வெளியானது. 

படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் வழங்கி உள்ளனர். 

இந்நிலையில் லியோ ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக, படத்தின் வசன எழுத்தாளரான இயக்குனர்  தீரஜ் வைத்தி, 'லியோ ட்ரெய்லரை பார்த்தேன். உங்கள் தாவம்பட்டை தரையில் இருக்கப் போகிறது' என கருத்து தெரிவித்திருந்தார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லியோ ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo Trailer Release Time update 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->