ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் அந்த பாடலை பார்ப்பாரா.? - பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம்தான் பதான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோயின் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த படம் வரும் 2023 ஜனவரி 25-இல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. தற்போது பதான் படத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில், நடிகை தீபிகா படுகோன் காவிநிற உடையில் கவர்ச்சியாக இருந்ததற்கு பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இந்த பாடல் குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

அதே போல், தற்போது மத்தியப் பிரதேச சட்டசபை சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறுகையில், ஷாருக்கான் தனது மகள் சுஹானா கானுடன் அந்த பாடலை பார்ப்பாரா.? பதான் திரைப்படத்தை அவரது மகளுடன் பார்க்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன். என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh speaker speech about pathan movie controversy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->