மானாமதுரையில் 08 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; 07 பேர் கைது..!
harassing 08 school girls in Manamadurai
மானாமதுரையில் 08 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 07 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இந்திரா நகர் கிராம நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இந்த சம்பாவிதம் நடந்துள்ளது. மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.

இதில் கலந்துக்கொண்ட சிறுமிகள் அங்கு நடந்த கலந்துரையாடலில் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்துள்ளனர். பெண் அதிகாரிகள் யாரேனும் தவறாக நடந்துள்ளார்களா? என்ற சிறுமிகளிடம் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதிலால் அதிர்சியடைந்துள்ளனர்.
அத்துடன், குறித்த சிறுமிகளை தனித்தனியாக விசாரித்துள்ளனர். சிறுமிகள் தெரிவித்த பகீர் பாலியல் தொல்லை புகார்கள் மீது தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறுமிகள் பள்ளிக்கு போகும் போதும், வரும் போதும் பாலியல் தொல்லை அளித்த அதே ஊரைச் சேர்ந்த 07 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன்படி, பள்ளிக்கு செல்லும் போது பாலியல் தொல்லை அளித்ததாக, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு முனியன் (66), மூக்கன் (72), மு (46), பழனி (46), மணி (50), சசி வர்ணம் (38) லட்சுமணன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
harassing 08 school girls in Manamadurai