உதயநிதி பிறந்த நாளில் சர்ப்ரைஸ் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்.! வைரல் வீடீயோ.!  - Seithipunal
Seithipunal


மாரி செல்வராஜ் இயக்குகின்ற 'மாமன்னன்' படக்குழுவினர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாமன்னன் பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

மாரி செல்வராஜ் இயக்கி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகின்ற திரைப்படம் தான் ‘மாமன்னன்’. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தான் தயாரிக்கின்றது. 

இந்தத் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார். மேலும் நடிகர்கள் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு அதிகாலையில் இருந்தே அரசியல் வட்டாரங்கள், சினிமா வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.

'மாமன்னன்' படக்குழுவினர் சார்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கையில் வாளேந்தியபடி மாமன்னன் பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamannan Poster For Udhayanithi Birthday 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->