மாமன்னன் படம் திரையிடப்பட்டால் திரையரங்கம் மீது தாக்குதல்.. தேனியில் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டால் திரையரங்கும் மீது தாக்குதல் நடத்தப்படும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்துள்ளார். 

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே, கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜின் மூன்றாவது படமாக மாமன்னன் இருக்கின்றது. எனவே, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனிடையே மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1ம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இதில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மாமன்னன் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படத்தின் தாக்கம் தான் மாமன்னன் திரைப்படம் என பேசினார். அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குனர் மாரி செல்வராஜின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் சாதி அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டால் திரையரங்கம் மீது தாக்குதல் நடத்தப்படும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamannan's film is screened theaters will be attacked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->