மாநாடு பார்ட்-2 குறித்த அசத்தல் தகவல்.! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு.!
Manadu 2 update
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டிரைவிங் லைசென்ஸ் திரைப்படத்தின் ரீமேக்கில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிம்பு இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு லால் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் டிரைவிங் லைசென்ஸ். சுராஜ் மற்றும் பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படம் மலையாள திரையுலகில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக்காக இருப்பதாகவும், இதனை விஜய் சந்தர் இயக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது. தமிழ் ரீமேக்கில் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவும், எஸ் ஜே சூர்யா சுராஜ் கதாபாத்திரத்திலும் நடிக்க போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில் சிம்புவின் மற்ற திரைப்படங்களில் சூட்டிங் முடிந்ததும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படம் மாநாடு பார்ட் 2-வாக ஒரு வெற்றியை சிம்புவுக்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.