மாநாடு ரீமேக் உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து இருப்பார்.‌ வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரேம்ஜி அமரன், கருணாகரன், சந்திரசேகர் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா போன்ற முக்கிய நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வித்யாசமான கதையை கொண்டிருப்பதால் மிகவும் சுவாரசியமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.

மேலும் படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. தமிழில் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் ஒரு தரப்பு எதிர்க்கும். ஆனால் மாநாடு படத்தில் அப்படி நெகடிவ் விமர்சனங்கள் எதுவுமே வரவில்லை. 

இந்த நிலையில், படத்தின் ரீமேக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த படத்தின் அனைத்து இந்திய மொழிகளுக்கான ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை முன்னனி நிறுவனமான சுரேஷ் ப்ரொடக்ஷன் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manadu remake and dubbing rights


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->