பாக்கவே பாவமா இருக்கு.. மணிமேகலையின் சமீபத்திய வீடியோவால் மனம் உருகிய நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர் மணிமேகலை. அவர் சினிமா பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து பேட்டி எடுப்பார். அவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும். 

டான்ஸ் மாஸ்டரான ஹுஸைனை காதலித்த மணிமேகலை தங்களது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு சன் டிவியை விட்டு அவர் விஜய் டிவியில் குடிபுகுந்தார்.

விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் மணிமேகலை போட்டியாளராக கலந்து கொண்டார். பின்னர் அந்த தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை செய்த கலாட்டா அனைவராலும் மறுக்க முடியாதது.

இதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவி சீரியல் ஒன்றில் களமிறங்கப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் மணிமேகலை தங்களது சேட்டைகளை வீடியோக்களாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் விஜய் டிவி பாலுடன் சேர்ந்து கமல் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manimegalai reels video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->