இது தமிழ்நாடா? உத்திரபிரதேசமா? அச்சத்தில் CM ஸ்டாலின்! வீடியோ வெளியிட்ட ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


இன்று (06/01/2025) அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கழக மாணவரணி சார்பில் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அண்ணா பல்கலை கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு கோட்டூர் சமூகநல கூடத்தில் வைக்கப்பட்டுள்ள அதிமுக மாணவரணி நிர்வாகிகளை நேரில் சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார்.

அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், பார்க்க அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து ஜெயக்குமார் தனது செல்போன் மூலம் வீடியோ கால் மூலமாக மாணவரணி நிர்வாகிகளிடம் பேசியுள்ளார்.

மேலும், ஜெயக்குமார் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடா? உத்திரபிரதேசமா?

சென்னை எழும்பூரில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் மாணவிகளிடம் இருந்து கருப்பு நிற துப்பட்டாக்களை பிடுங்கியது ஏன்? கருப்பு நிறத்தை கண்டால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு அச்சம்?" என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jeyakumar Condemn to DMK MK Stalin Karuppu thuppatta


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->