பொங்கல் பண்டிகையை: மொத்தம் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தாவது, "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வழக்கமாக இயக்கப்படும் 8,368 பஸ்கள் கூட 5,736 சிறப்பு பஸ்கள் சேர்த்து, மொத்தம் 14,104 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து வெளியூருக்கு வழக்கமாக 2,092 பஸ்கள் இயக்கப்படும். இதுடன் சிறப்பு பஸ்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கோயம்பேடு, மாதவரம், மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களிலிருந்து இவை இயக்கப்படும். சென்னையில் இருந்து 7.75 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த ஆண்டின் 6.54 லட்சம் பயணத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பாகும். 

கோயம்பேட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சில பஸ்கள் இயக்கப்படும். மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா, ஊத்துக்கோட்டை, திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மற்ற பகுதிகளுக்கான பஸ்கள் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்பும் வசதிக்காக, ஜனவரி 15 முதல் 19 ஆம் தேதி வரை, 10,460 வழக்கமான பஸ்களுடன் 5,340 சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 15,800 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று அமைச்சர் தெரிவித்தார்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt special bus Pongal  2025


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->