பாராதிராஜாவின் உடல்நிலை குறித்து, மகன் மனோஜ் வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் மயக்கமடைந்த காரணத்தால் ஒரு நாள் மதுரையிலேயே ஓய்வெடுத்துவிட்டு பின், சென்னைக்கு திரும்பினார். 

அதன்பின்னர் நீலாங்கரையில் இருக்கும் தனது இல்லத்தில் ஓய்வெடுத்த நிலையில் அவருக்கு மீண்டும் அஜீரண கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் பாரதிராஜா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு பரிசோதனைகள் முடிந்து, தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. இத்தகைய நிலையில், அவரது உடல் நலம் குறித்து அவரது மகன் மனோஜ் பாரதிராஜா, 'பாரதிராஜாவின் உடலில் நீர் சத்து குறைபாடு இருப்பதால், உடல்நிலை சோர்வாக இருக்கிறது என்றும், தற்போது அவருக்கு ஓய்வு தேவை என்றும், எனவே தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய மனோஜ், இரண்டு, மூன்று நாட்கள் மருத்துவமனையில் அவர் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், அவருக்கு தேவையான சிகிச்சைகள் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manoj about bharathiraja Body Condition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->